லைஃப்ஸ்டைல்

சைனீஸ் ஸ்டைல் மட்டன் சாப்ஸ்

Published On 2016-10-12 08:45 GMT   |   Update On 2016-10-12 08:45 GMT
வீட்டிலேயே சைனீஸ் ஸ்டைலில் மட்டன் சாப்ஸ் செய்யலாம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஆட்டுக்கறி சாப்ஸ் துண்டுகள் - 10
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

கிரேவி செய்ய :

வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
அஜினமோட்டோ - 1 சிட்டிகை
சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்

செய்முறை :

* ஒரு வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும்.

* கிரேவியில் கொடுக்கப்பட்டுள்ள வெங்காயம், குடமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் மட்டன் சாப்ஸ், அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கலந்து அரைமணி நேரம் ஊறவிடவும்.

* குக்கரில் ஊற வைத்த கறியை போட்டு 5 விசில் போட்டு வேக வைக்கவும். விசில் போனவுடன் அந்த கறியை எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

* ஒரு அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் வெங்காயம், குடமிளகாய் போட்டு வதக்கவும்.

* பின்னர் அதில் அஜினமோட்டோ, சோயா சாஸ், சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

* கடைசியாக அதில் பொரித்து வைத்துள்ள சாப்ஸையும் சேர்த்து கிரேவி திக்கானதும் இறக்கவும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News