பெண்கள் உலகம்

நவராத்திரிக்கு ஏற்ற நவரசப் பாயசம்

Published On 2016-10-08 09:09 IST   |   Update On 2016-10-14 09:34:00 IST
நவராத்திரியின் போது தினமும் ஏதாவது ஒரு சுண்டல், பாயசம் போன்றவைகளை செய்வது வழக்கம். இன்று நவரசப்பாயசம் செய்து அசத்தலாம்
தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி - அரை கப்
கேரட் துருவல் - அரை கப்
உலர்ந்த திராட்சை, முந்திரி, பாதாம், சாரப்பரப்பு - தேவைக்கு
சர்க்கரை - முக்கால் கப்
சுண்ட காய்ச்சிய பால் - 1 கப்
காய்ச்சிய பால் - 1 கப்
நெய் - தேவைக்கு
ஏலக்காய் தூள் - அரை ஸ்பூன்
தண்ணீர் - 1 1/2 கப்

செய்முறை :

* பாதாமை சீவிக் கொள்ளவும்.

* கடாயில் சிறிது நெய் ஊற்றி அதில் கேரட் துருவலை போட்டு வதக்கிக்கொள்ளவும்.

* அடுத்து உலர்ந்த திராட்சை, சீவிய பாதாம், முந்திரி, சாரப்பரப்பை தனித்தனியாக நெய்யில் வறுத்துக்கொள்ளவேண்டும்.

* ஒரு பாத்திரித்தில் ஜவ்வரிசியை போட்டு அதனுடம் தண்ணீர், காய்ச்சிய பால் சேர்த்து வேக விடவும்.

* மற்றொரு பாத்திரத்தில் நெய்யில் வதக்கிய கேரட் துருவலை போட்டு சிறிது பால் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

* வெந்த ஜவ்வரியில் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரைந்தலும் சுண்டக்காய்ச்சிய பால் விட்டு, அதில் கேரட் துருவல், தேங்காய் துருவல், வறுத்த திராட்சை, பாதாம் முந்திரி மற்றும் சாரப்பரப்பை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி, சிறிது ஏலக்காய் பொடி சேர்த்து சூடாகவோ, குளிரவைத்தோ பரிமாறவும்.

* வெள்ளை, சிவப்பு, ப்ரவுன், கருப்பு, மஞ்சள் போன்ற பல நிறங்கள் மற்றும் சுவைகள் சேர்த்து நவரசத்தையும் வெளிப்படுத்துவதாக இந்த பாயசம் அமையும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News