லைஃப்ஸ்டைல்

மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்டஃப்டு பிரட் பஜ்ஜி

Published On 2016-08-27 08:40 GMT   |   Update On 2016-08-27 08:40 GMT
கிரீன் சட்னி, கெட்சப் தடவி செய்யப்படும் ஸ்டஃப்டு பிரட் பஜ்ஜி மாலை நேரம் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :

பிரட் துண்டுகள் - 10
கிரீன் சட்னி - பிரட்டில் தடவ தேவையான அளவு
கெட்சப் - பிரட்டில் தடவ தேவையான அளவு
பஜ்ஜி மாவு - ஒரு கப்
எண்ணெய் - பொரிக்க

கிரீன் சட்னி :

கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லி ஒரு கப் அளவு எடுத்து மண்ணில்லாமல் ஆய்ந்து பொடியாக நறுக்கி அத்துட‌ன் இஞ்சி ஒரு துண்டு, ப‌.மிள‌காய் ஒன்று, சின்ன‌ வெங்காய‌ம் மூன்று, உப்பு சிறிது எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள‌வும்.

செய்முறை :

* முதலில் பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி விட்டு முக்கோண வடிவில் வெட்டி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

* ஒரு பிரெட்டின் ஒரு பக்கம் கெட்சப்பையும், இன்னொரு பிரெட்டில் கிரீன் சட்னியையும் தடவி ஒன்றாக மூடி பிறகு பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

* சுவையான மாலை நேர டிபன் ஸ்டஃப்டு பிரட் பஜ்ஜி ரெடி.

குறிப்பு :

* ஸ்டஃப்டு பிரட் பஜ்ஜி எண்ணெய் அவ்வளவா குடிக்காது. இப்படி ஸ்டப் செய்து பொரித்து சாப்பிடுவதால் புளிப்பு, இனிப்பு, காரம் என்று கூடுதல் சுவை.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News