லைஃப்ஸ்டைல்

செட்டிநாடு பால் பணியாரம் செய்முறை விளக்கம்

Published On 2016-05-28 08:43 GMT   |   Update On 2016-05-28 08:43 GMT
பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. இங்கு செட்டிநாடு பால் பணியாரத்தின் ஈஸியான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி, உளுந்து - தலா ஒரு கப்,
பால் - அரை லிட்டர்,
திக்கான தேங்காய் பால் - ஒரு டம்ளர்
சர்க்கரை - ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

* பச்சிரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து 2 மணி நேரம் ஊறவிட்டு, நைஸாக அரைத்து, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.

* பாலைக் காய்ச்சி இறக்கி சிறிது ஆறியதும் தேங்காய் பால், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

* வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமாக எரியவிடவும்.

* மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்து, இதை குளிர்ந்த நீரில் போட்டு எடுக்கவும்.

* பொரித்து வைத்த பணியாரங்களை பாலில் போட்டு 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

குறிப்பு:

மாவு புளிக்கக் கூடாது. அரைத்த சிறிது நேரத்திலேயே செய்துவிடவும். பணியாரத்தை பாலில் அதிக நேரம் ஊறவிடக் கூடாது.

பரிமாறுவதற்கு 10 நிமிடம் முன்பு பாலில் சேர்க்கவும்.

விருப்பப்பட்டவர்கள் முந்திரி, பாதாம் சேர்த்துக்கொள்ளலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News