லைஃப்ஸ்டைல்

உருளைக்கிழங்கு சீஸ் பால்

Published On 2016-04-27 08:43 GMT   |   Update On 2016-04-27 08:43 GMT
மாலை வேளையில் சற்று மொறுமொறுப்புடனும், குழந்தைகளுக்கு ஏதாவது செய்து தர வேண்டும் என்று எண்ணினால், உருளைக்கிழங்கு சீஸ் பால் செய்து தரலாம்.
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 5
சீஸ் - 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் - 2
பூண்டு விழுது - அரை ஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பிரட் - 12 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும்.

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பௌலில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதனுடன் துருவிய சீஸ், பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* அடுத்து அதில் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

* பிரட் துண்டுகளின் முனையை நீக்கிவிட்டு, அதனை நீரில் நனைத்து, பின் இரு கைகளுக்கு நடுவில் வைத்து தண்ணீரை நன்றாக பிழிந்து விட்டு ஒரு தட்டில் வைத்து, அதன் நடுவே உருளைக்கிழங்கு கலவையை வைத்து, பந்து போன்று உருட்டிக் கொள்ள வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, நன்றாக காய்ந்ததும், அதில் உருட்டி வைத்துள்ள உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

* இப்போது சுவையான உருளைக்கிழங்கு சீஸ் போண்டா ரெடி!!!

* இதனை தக்காளி சாஸ் அல்லது கெட்சப் உடன் சூடாக சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.  

Similar News