லைஃப்ஸ்டைல்

சுவையான பெப்பர் முட்டை மசாலா

Published On 2016-04-24 02:30 GMT   |   Update On 2016-04-23 08:03 GMT
சுவையான பெப்பர் முட்டை மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முட்டை - 3
வெங்காயம் - 1
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன
மிளகுதூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்

செய்முறை :

* முட்டையை வேக வைத்து உரித்து 2 ஆக வெட்டி வைத்து கொள்ளவும்

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும், மஞ்சள்தூள், மிளகுதூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி நறுக்கிய முட்டையை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து முட்டை உடையாமல் கிளறி இறக்கவும்.

* சுவையான பெப்பர் முட்டை மசாலா ரெடி.

* சாம்பார், மோர் குழம்புடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

Similar News