லைஃப்ஸ்டைல்

பட்டர் சிக்கன் செய்வது எப்படி

Published On 2016-04-20 06:00 GMT   |   Update On 2016-04-20 06:00 GMT
இந்திய உணவுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற பட்டர் சிக்கன் தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்
தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
பட்டர் - 50 -75 கிராம்
காஷ்மீரி சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (பெரியது)
தக்காளி - 2 (பெரியது)
முந்திரிப்பருப்பு - 10
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
புளிப்பில்லாத கட்டி தயிர் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 1,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி இலை - அலங்கரிக்க

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சிக்கனை ஒரே போல் மீடியம் சைஸ் துண்டுகள் போட்டு அதனை நன்கு சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், உப்பு, சில்லிபவுடர் 1 ஸ்பூன் போட்டு பிரட்டி ஊற வைக்கவும்.

* தக்காளியை கொதிக்கும் நீரில் போட்டு தோல் உரித்து வைக்கவும்.

* வெங்காயம், முந்திரியை சிறிது பட்டர் போட்டு நன்கு வதக்கி ஆறவைக்கவும்.

* மிக்ஸியில் தோல் உரித்த தக்காளி, வதக்கிய வெங்காயம், முந்திரி சேர்த்து அரைத்து எடுக்கவும்.

* பின்பு கடாயில் பட்டர் விட்டு அதிகம் உருகும் முன்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு உடனே ஊற வைத்த சிக்கனை போட்டு சிவக்க பிரட்டி வேக விடவும்.

* பின்பு அதில் அரைத்த பேஸ்ட் சேர்த்து, 1 டீஸ்பூன் மிளகாய் தூள், உப்பு சிறிது சேர்த்து பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்க்கவும்.

* நன்கு கொதிவந்து மணம் வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

* சுவையான பட்டர் சிக்கன் ரெடி.

* இது நாண், சப்பாத்தி, பரோட்டா உடன் பரிமாறலாம்.

Similar News