சமையல்

சத்து நிறைந்த கோதுமை வெங்காய தோசை

Published On 2022-11-19 05:46 GMT   |   Update On 2022-11-19 05:46 GMT
  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி உகந்தது.
  • சர்க்கரை நோயாளிகள் கோதுமை உணவுகளை சாப்பிடுவது நல்லது.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்

வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 5

சீரகம் - ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

தாளிக்க

கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை

வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதை கரைத்து வைத்த மாவில் சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து கல்லில் கனமாக விட்டு, இருபுறமும் எண்ணெய் ஊற்றி ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு மறுபுறம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

இப்போது சூப்பரான கோதுமை வெங்காய தோசை ரெடி.

இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி, புதினா சட்னி அருமையாக இருக்கும்.

Tags:    

Similar News