சமையல்

சூப்பரான ராகி வெஜிடபிள் நூடுல்ஸ்

Published On 2023-01-19 08:52 GMT   |   Update On 2023-01-19 08:52 GMT
  • சிறுதானியங்களில் அதிகளவு சத்துகள் அடங்கியுள்ளன.
  • சிறுதானியங்கள் நூடுல்ஸ் வடிவிலும் கிடைக்கின்றன.

தேவையான பொருட்கள்

ராகி நூடுல்ஸ் - 1 கப்

பெரிய வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

கேரட் - 1/2 கப்

வெங்காயத்தாள் - சிறிதளவு

குடை மிளகாய்- 1

பூண்டு- 1

முட்டைகோஸ் - சிறிய துண்டு

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள்- சிறிதளவு

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

பெரிய வெங்காயம், முட்டைகோஸ், குடைமிளகாயை நீளவாக்கில் மெலிதாக நறுக்கிகொள்ளவும்.

கேரட், பூண்டு, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

ஒரு வாணலியில் பாதியளவு தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு உப்பு மற்றும் கால் டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் ராகி நூடுல்ஸை சேர்த்து 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள்

பின், தண்ணீரை வடிகட்டி சிறிது எண்ணெய் சேர்த்து உதிர்த்து வைக்கவும். எண்ணெய் சேர்த்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாது.

மற்றொரு வாணலியில் எண்ணெய், வெண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து சிவக்கும் வரை வதக்கிய பின்னர் பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் கேரட், குடை மிளகாய், முட்டைகோஸை சேர்த்து வதக்கவும்

காய்கறிகள் முக்கால் பாகம் வெந்ததும் சிறிதளவு மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் வேகவைத்த ராகி நூடுல்ஸ் சேர்த்து கிளறவும்

மசாலா அனைத்தும் நூடுல்ஸில் சேர்ந்ததும் அதில் இன்னும் சிறிதளவு வெங்காயத்தாள், மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சூப்பரான சுவையான ராகி வெஜிடபிள் நூடுல்ஸ் ரெடி.

Tags:    

Similar News