சமையல்

15 நிமிடத்தில் சத்தான முருங்கை பூ ரசம் செய்யலாம் வாங்க...

Published On 2023-01-24 09:17 GMT   |   Update On 2023-01-24 09:17 GMT
  • குழந்தையின்மை பிரச்சனைக்கு முருங்கை பூ நல்ல பலனளிக்கும்.
  • ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று சாப்பிடுவது நல்லது.

தேவையான பொருட்கள்:

முருங்கை பூ - 2 கைப்பிடி அளவு

தக்காளி - 1

நெல்லி அளவு - புளி

பெருங்காயம், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

பூண்டு - 5 பல்

சீரகம் - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 2

கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிது

உப்பு , எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

முருங்கை பூவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை 1/2 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் பெருங்காயம் சேர்த்து சிவந்ததும் பொடித்த சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.

அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.

தக்காளி சற்று வதங்கியதும் சுத்தம் செய்த முருங்கை பூ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

பின்னர் புளி தண்ணீர், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

ரசம் நன்கு நுரை கூடியதும் பாத்திரத்தில் மாற்றி உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். (ரசத்தை கொதிக்க விடக்கூடாது).

இப்போது சத்தான முருங்கை பூ ரசம் ரெடி.

Tags:    

Similar News