சமையல்

இல்லத்தரசிகளுக்கு உதவும் சில வீட்டுக்குறிப்புகள்

Published On 2023-10-12 11:00 IST   |   Update On 2023-10-12 11:00:00 IST
  • எலிக்கு புதினா வாசனை பிடிக்காது.
  • பூண்டு பேஸ்ட் கலந்த தண்ணீரை தெளித்தால் கரப்பான் பூச்சிகள் வராது.

* எலிக்கு புதினா வாசனை பிடிக்காது. எனவே புதினாவையோ அல்லது புதினா எண்ணெயையோ வைத்தால் அது வராது.

* கரப்பான் பூச்சி வரும் இடங்களில் மிள்குத்தூள், வெங்காய் பேஸ்ட் அல்லது பூண்டு பேஸ்ட் கலந்த தண்ணீரை தெளித்தால் கரப்பான் பூச்சிகள் வராது.

* ஈக்களின் தொல்லைகள் நீங்க வீட்டை துடைக்கும் போது அதில் சிறிதளவு உப்பு சேர்த்து துடைத்தால் ஈக்களின் தொல்லை இருக்காது.

* எறும்புகள் அதிகம் கிச்சனில் தொல்லை கொடுக்கிறதா? ஒரு டம்ளர் நீரில் 2 ஸ்பூன் உப்பு கலந்து எறும்பு உள்ள இடங்களில் தெளித்தால் எறும்புகள் வராது. அதேபோல் பெருங்காயத்தை தூவிவிட்டாலும் எறும்புத்தொல்லை இருக்காது.

* சில சமயம் வெல்லத்தை துருவ வேண்டும் என்றால், காய்கறித் துருவலில் வைத்து துருவினால் சிரமம் இல்லாமல், சீக்கிரமே வெல்ல தூள் நமக்கு கிடைக்கும்.

* வெயில் காலத்தில் தயிர் சீக்கிரம் புளித்து போய்விடும். அப்படி, தயிர் புளிக்காமல் இருக்க அதில் நசுக்கிய இஞ்சி, ஒரு துண்டு தேங்காய் பத்தை இரண்டையும் தயிரில் போட்டு வைத்தால் தயிர் சீக்கிரம் புளித்து போகாது.

* அதேபோல், நெய் ரொம்ப நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்க, நெய்யில் ஒரு சிறிய துண்டு வெல்லக்கட்டியை போட்டு வைத்தால் போதும்.

* அதுபோன்று, நீங்கள் வெங்காயம் நறுக்கும் போது, கத்தியை லேசாக சூடு செய்துவிட்டு அதன் பின்பு வெங்காயம் நறுக்கினால் கண்களில் தண்ணீர் வராது.

* சில சமயம் நாம் வைத்திருக்கும் தோசை மாவில் தோசை சரியாகவே வராது. அதேபோன்று, தோசை மாவு கொஞ்சம் தான் இருக்கிறது என்றால் அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக அடித்து கலக்கி அந்த மாவில் தோசை வார்த்து பாருங்கள். கல்லில் தோசை ஒட்டாமலும் வரும். அதே சமயம் தோசையில், புளிப்பு தெரியாமலும் இருக்கும்.

Tags:    

Similar News