சமையல்

எளிய முறையில் செய்யலாம் சேமியா உப்புமா

Published On 2022-07-04 06:06 GMT   |   Update On 2022-07-04 06:06 GMT
  • உப்புமா இந்தியா முழுவதும் செய்யப்படும் ஒரு பிரபலமான உணவு.
  • உப்புமாவில் பல வகைகள் உண்டு.

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 பாக்கெட்

வெங்காயம் - 1

இஞ்சி - 1 இன்ச்

பச்சை மிளகாய் - 1

நெய் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 3-4 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

வரமிளகாய் - 2

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு தூவி, தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து, வேக வைக்க வேண்டும்.

தண்ணீரானது வற்றி, சேமியா மென்மையாக வெந்த பின், அதனை இறக்கி பரிமாறினால், சேமியா உப்புமா ரெடி!!!

Tags:    

Similar News