சமையல்

ஆப்பிள் வைத்து தித்திப்பான மிட்டாய் செய்யலாம் வாங்க...

Published On 2023-04-01 09:26 GMT   |   Update On 2023-04-01 09:26 GMT
  • ஆப்பிள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
  • இந்த ரெசிபியை செய்ய 20 நிமிடங்களே போதுமானது.

தேவையான பொருட்கள்

கிரீன் ஆப்பிள் - 2

சர்க்கரை - 1 கப்

தண்ணீர் - அரை கப்

எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

சிவப்பு கலர் பவுடர் - 1 டீஸ்பூன்

செய்முறை

ஆப்பிளை விதை நீக்கி விட்டு நீளமான வில்லைகளாக வெட்டிக்கொள்ளவும். வெட்டிய ஆப்பிளை ஈரம் இல்லாமல் நன்றாக துணியால் துடைத்து கொள்ளவும்.

ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

அடுத்து அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

சர்க்கரை நன்றாக கரைந்து பாகு பதம் வரும் போது சிறிது பாகை எடுத்து தண்ணீரில் ஊற்றினால் பாகு கரையால் கையால் உருட்டும் பதத்திற்கு வரும். அந்த சமயத்தில் சிவப்பு கலர் பவுடர் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

அடுத்து ஒவ்வொரு ஆப்பிள் வில்லைகளாக சர்க்கரை பாகில் முக்கி எடுத்து பட்டர் பேப்பரில் வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்யவும்.

இதை 2 மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.

இப்போது சூப்பரான ஆப்பிள் மிட்டாய் ரெடி.

இதே போல் உங்களுக்கு விருப்பமான பழங்களில் செய்யலாம்.

Tags:    

Similar News