சமையல்
- டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு இது.
- சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த உணவு சிறந்தது.
தேவையான பொருட்கள்
கேழ்வரகு - 1 கப்
கொள்ளு - கால் கப்
ஜவ்வரிசி - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
நெய் அல்லது நல்லெண்ணெய் - தேவைக்கு
செய்முறை
கேழ்வரகு, கொள்ளு, வெந்தயம், ஜவ்வரிசியை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைக்கவும்.
ஊற வைத்ததை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவில் உப்பு சேர்த்து புளிக்க விடவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானதும் மாவை மெல்லிய தோசையாக வார்த்து சுற்றி நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு 1 நிமிடம் மூடி போட்டு வேக விட்டு எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான கேழ்வரகு கொள்ளு தோசை ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள சட்னி, தக்காளி சட்னி சூப்பராக இருக்கும்.