சமையல்

சத்து நிறைந்த கேழ்வரகு பீட்ரூட் தோசை

Published On 2023-05-25 04:41 GMT   |   Update On 2023-05-25 04:41 GMT
  • தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
  • பீட்ரூட்டை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை நோய் வருவதை தடுக்கலாம்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு - 100 கிராம்

அரிசி மாவு - ஒரு மேசைகரண்டி

ரவை - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - 1

துருவிய பீட்ரூட் - 3 மேசைகரண்டி

ப.மிளகாய் - ஒன்று

கொத்தும்மல்லி - சிறிதளவு

உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, ரவை, வெங்காயம், துருவிய பீட்ரூட், ப.மிளகாய், கொத்தும்மல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

* அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்துஎடுத்து பரிமாறவும்.

* இப்போது சூப்பரான கேழ்வரகு பீட்ரூட் தோசை ரெடி.

* இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல் மற்றும் இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News