சமையல்

கடையில் வாங்க வேண்டாம்... வீட்டிலேயே செய்யலாம் புளியோதரை மிக்ஸ்

Update: 2023-06-05 09:31 GMT
  • புளியோதரை மிக்ஸ் செய்வது மிகவும் சுலபம்.
  • இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கல் நீக்கிய கருப்பு எள்- 50 கிராம்

உளுந்தம்பருப்பு - 50 கிராம்

கடலைப்பருப்பு - 50 கிராம்

வேர்கடலை - 50 கிராம்

மிளகாய்த்தூள் - 4 டேபிள் ஸ்பூன்

மல்லித்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

புளி - 3 எலுமிச்சைபழத்தின் அளவு

கடுகு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

பெருங்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 3 கீற்று

நல்லெண்ணெய் - 3/4 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வெறும் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் எள், உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு இவற்றை தனித்தனியாக போட்டு வறுத்து ஆறவைத்து பொடிசெய்து வைக்கவும்.

வேர்கடலையையும் லேசாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

புளியை ஒரு பாத்திரத்தில் இட்டு அதில் 1 கப் சுடுநீர் ஊற்றி ஊற வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் விட்டு அது காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு போட்டு தாளித்த பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் போட்டு கிண்டி, எள், உ.பருப்பு, க.பருப்பு பொடியினை போட்டு கிளறி விடவும்.

அடுத்து வேர்கடலை, பெருங்காய்த்தூள் மற்றும் புளித்தண்ணீர் தேவையான அளவு உப்பு இட்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

பச்சை வாசம் போய் கலவை கெட்டியாக வரும் போது இறக்கி விடவும்.

கலவை ஆறிய பின் ஒரு பாட்டிலில் எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்துக்கொள்ளவும். தேவையான நேரம் சூடான சோற்றில் போட்டு கிளறி சாப்பிடவும்.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News