சமையல்

கேரள ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம்

Published On 2023-04-14 09:21 GMT   |   Update On 2023-04-14 09:21 GMT
  • கேரளாவில் பாசிப்பருப்பு பாயாசம் மிகவும் பிரபலம்.
  • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 1 கப்

வெல்லம் - 1 கப் (துருவியது)

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

நீர் போன்ற தேங்காய் பால் - 2 1/2 கப்

முந்திரி - 3 டேபிள் ஸ்பூன்

உலர் திராட்சை - 3 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய் - 4

செய்முறை:

* ஒரு வாணலியை அடுப்பில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் பாசிப்பருப்பை சேர்த்து 2 நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் நீர் போன்ற தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

* அதன் பின் அதில் ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் அல்லது பருப்பு வேகும் வரை மூடி வைக்க வேண்டும்.

* பருப்பு நன்கு வெந்த பின், வெல்லத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி இறக்க வேண்டும்.

* இறுதியில் அதில் கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து கிளறி விட்டு, அத்துடன் எஞ்சிய 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம் ரெடி!

Tags:    

Similar News