சமையல்

உடலுக்கு வலிமை தரும் காரசாரமான நல்லி எலும்பு ரசம்

Published On 2023-02-25 06:11 GMT   |   Update On 2023-02-25 06:11 GMT
  • காய்ச்சல், உடல் வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை குடிக்கலாம்.
  • இந்த ரசத்தை சூப்பாகவும் குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்

நல்லி எலும்பு - கால் கிலோ

வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்

சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்

மஞ்சள் - 1/4 ஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க :

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்

கொத்தமல்லி - கையளவு.

மிளகு - தேவைக்கு ஏற்ப

செய்முறை

நல்லி எலும்பை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட ஆட்டுக்காலை போட்டு தண்ணீர் ஊற்றி அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, சிறிது கொத்தமல்லி தழை, மிளகு தூள், வெங்காயம், சீரகப் பொடி, மஞ்சள் சேர்த்து நன்குக் கலந்து குக்கரை மூடி அடுப்பில் குறைவான தீயில் 30 நிமிடங்கள் வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

பின் வேக வைத்த மட்டன் தண்ணீரை ஊற்றவும்.

இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

இப்போது காரசாரமான நல்லி எலும்பு ரசம் தயார்.

Tags:    

Similar News