சமையல்

சத்தான சுவையான முருங்கைக்கீரை சாம்பார்

Update: 2023-06-08 09:30 GMT
  • தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்துடன் பிற சத்துக்களும் கிடைக்கும்.
  • கீரை சாம்பார் சாதம், தோசை, சப்பாத்தி, இட்லியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருள்கள்:

துவரம்பருப்பு - 1/4 கப்

முருங்கைக்கீரை - ஒரு கப்

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1 சிறியது

பச்சைமிளகாய் - 3

பூண்டுப்பல் - 5

மஞ்சள்தூள் - சிறிது

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

தேங்காய்ப்பூ - 3 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்

கடுகு

உளுந்து

சீரகம்

பெருஞ்சீரகம் - சிறிது

காய்ந்த மிளகாய் - 2

பெருங்காயத்தூள் - சிறிதளவு

கறிவேப்பிலை

செய்முறை:

தக்காளி, பச்சைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் துவரம் பருப்பை போட்டு நன்றாகக் கழுவிவிட்டு, பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.

கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை போட்டு தாளித்துவிட்டு வெங்காயம், பூண்டு, ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.

தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொள்ளலாம்.

நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு(மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும். முருங்கைக்கீரை அதிகநேரம் கொதித்தால் கசக்க ஆரம்பித்து விடும். எனவே கீரை போட்டு 7 நிமிடம் வேக வைத்தால் போதுமானது.

இப்போது முருங்கைக்கீரை சாம்பார் தயார்.

இதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News