சமையல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா ரசம்

Published On 2023-02-15 06:01 GMT   |   Update On 2023-02-15 06:01 GMT
  • புதினா இலைகளை வாயில் போட்டு நன்கு மென்று தின்பதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
  • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

புதினா - 1 கட்டு

புளிக்கரைசல் - ஒரு கப்

கீறிய பச்சை மிளகாய் - 2

வெந்த துவரம் பருப்பு - அரை கப்

மிளகு, சீரகம், ரசப்பொடி – தலா 2 ஸ்பூன்

தனியா - 1 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

நெய் - 1டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

புதினாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

வெறும் வாணலியில் மிளகு, சீரகம், துவரம் பருப்பு, தனியாவை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

புளிக்கரைசல் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

இதில் வறுத்து பொடித்த பொடி, புதினா ஆகியவற்றை சேர்க்கவும்.

இரண்டு கப் தண்ணீர் எடுத்து வெந்த துவரம் பருப்பை கரைத்து கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும்.

ரசம் பொங்கி, நுரைத்து வரும் பொது, கீழே இறக்கி வைத்து நெய்யில் கடுகு தாளித்துக்கொட்டி பரிமாறவும்.

இப்போது சூப்பரான புதினா ரசம் ரெடி.

Tags:    

Similar News