சமையல்

மீல் மேக்கர் பொடிமாஸ்

Update: 2022-07-05 06:01 GMT
  • முட்டையில் பொடிமாஸ் செய்து இருப்பீங்க.. இன்று மீல் மேக்கரில் பொடிமாஸ் செய்யலாம்.
  • இது தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கர் - 20

பச்சை மிளகாய் - 2

காய்ந்த மிளகாய் - 2

பூண்டு - 3

வெங்காயம் - ஒன்று

குழம்பு மசாலா பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்

கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - ஒன்றரை டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

செய்முறை:

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியில் காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து வறுத்து பின்னர் மிக்ஸிஜாரில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஊறவைத்த மீல் மேக்கரை நன்றாகப் பிழிந்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்..

ஒரு வாணலியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக ஆனதும், குழம்பு மசாலா, கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்..

பிறகு, அரைத்து வைத்த மீல் மேக்கர், உப்பு சேர்த்து கிளறிவிடவும்.

இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி கிளறி 2 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.

அவ்ளோதாங்க.. சுவையான மீல் மேக்கர் பொடிமாஸ் ரெடி..!.

Tags:    

Similar News