சமையல்

சத்து நிறைந்த குதிரைவாலி கிச்சடி

Published On 2022-07-02 05:56 GMT   |   Update On 2022-07-02 05:56 GMT
  • குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.
  • இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி - ஒரு கப்

காய்கறிக் கலவை (கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ்) - ஒரு கப்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

பச்சை மிளகாய் - 4

இஞ்சி பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

நெய் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிதளவும்

தாளிக்க:

பட்டை, லவங்கம் - 2

பிரியாணி இலை - 2

மராத்தி மொக்கு - ஒன்று

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி, பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும்.

குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை போட்டு தாளித்த பின்னர், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பிறகு தக்காளியை சேர்த்து குழைய வதக்கவும்.

அடுத்து காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அத்துடன் அரிசி, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.

குக்கரில் ஆவி அடங்கிய பிறகு மூடியைத் திறந்து, கொத்தமல்லி, நெய்விட்டுக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.

இப்போது சூப்பரான குதிரைவாலி கிச்சடி ரெடி.

Tags:    

Similar News