சமையல்

கேரளா ஸ்பெஷல் மீன் கறி

Published On 2023-02-17 09:19 GMT   |   Update On 2023-02-17 09:19 GMT
  • தேங்காய் எண்ணெயில் செய்யும் மீன் கறி சுவையாக இருக்கும்.
  • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அயிலை மீன் - 1 கிலோ

சின்ன வெங்காயம் - 50 கிராம்

தக்காளி - 1

இஞ்சி - 1

பூண்டு - 7

கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு

பச்சை மிளகாய் - 3

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

புளி - நெல்லிக்காய் அளவு

தனியா தூள் - 1 1/2 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

வெந்தயம் -1 டீஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி, வெங்காயம் நன்றாக ஆறியதும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் மண் சட்டியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 

அடுத்து அதில் பச்சை மிளகாய், மஞ்சள் தூள், தனியா தூள், சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

இப்போது அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி-வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு கொதித்து பச்சை வாசனை போனபின்பு அதில் மீன் சேர்த்து வேக விடவும்.

மீன் வெந்தவுடன் இறுதியாகக் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான கேரளா மீன் கறி தயார்.

Tags:    

Similar News