சமையல்

ரோட்டுக்கடை கீரை பக்கோடா செய்யலாம் வாங்க...

Published On 2023-07-14 09:35 GMT   |   Update On 2023-07-14 09:35 GMT
  • கீரை சாப்பிடாத குழந்தைகளும் இந்த ஸ்நாக்ஸை விரும்பி சாப்பிடுவார்கள்.
  • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஏதாவது ஒரு கீரை - 1 கட்டு

கடலை மாவு - 2 கப்

அரிசி மாவு - 4 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு - தேவைக்கேற்ப

பச்சை மிளகாய் - 4

இஞ்சி - சிறு துண்டு

சீரகம் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை :

கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முந்திரிப்பருப்பு, ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றுடன் இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரிப்பருப்பு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

இத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்த்து பக்கோடா மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.

தண்ணீர் சேர்த்து பிசிறினாற்போல் உதிரியாக தயாரிக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் 2 டீஸ்பூன் எடுத்து பக்கோடா மாவில் விட்டு பிசிறி கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறிது சிறிதாக கிள்ளிப்போட்டு எடுக்கவும்.

இப்போது சூப்பரான கீரை பக்கோடா ரெடி.

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News