சமையல்

பஞ்சாபி ஸ்பெஷல் தயிர் பக்கோடா

Published On 2023-05-11 09:32 GMT   |   Update On 2023-05-11 09:32 GMT
  • தயிர் வடை கேள்விப்பட்டிருப்பீங்க. அது என்ன தயிர் பக்கோடா?
  • வாங்க இன்னைக்கு இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தயிர் - 400 கிராம்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 3 கப்

பக்கோடா செய்ய :

கடலை மாவு - 1 கப்

சீரகம் - 4 டீஸ்பூன்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

கொத்தமல்லி - சிறிதளவு

தாளிக்க :

கடுகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

செய்முறை :

வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.

ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் , நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

கடாயில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி கடலை மாவுக் கலவையை பக்கோடா போல் உதிர்த்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இறுதியாக தண்ணீர் ஊற்றி கலந்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா பொடி சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

இவை நன்கு வதக்கியபின் கலந்து வைத்துள்ள தயிர் கலவையை அதில் ஊற்றவும்.

ஒரு முறை கொதித்ததும் வறுத்து வைத்துள்ள பக்கோடாவை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கி பரிமாறவும்.

அடுப்பில் இருந்து இறக்கி அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

இப்போது சூப்பரான தயிர் பக்கோடா ரெடி.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News