சமையல்

இட்லி மீந்து விட்டதா? உப்புமா செய்யலாம் வாங்க...

Published On 2023-07-07 06:07 GMT   |   Update On 2023-07-07 06:07 GMT
  • இட்லி சாப்பிடாத குழந்தைகளும் இதை விரும்புவார்கள்.
  • இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்து விடலாம்.

தேவையான பொருட்கள் :

இட்லி - 8

நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

கடுகு - அரை டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்

ப.மிளகாய் - 3

வேர்க்கடலை - சிறிதளவு

முந்திரி - 10

சின்ன வெங்காயம் - 50 கிராம்

கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

இட்லியை நன்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சாம்பார் பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

அடுத்து அதில் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும்.

உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி... சுட சுட பரிமாறுங்கள்.

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News