சமையல்

மகத்துவம் நிறைந்த மண்பானை சமையல்

Published On 2023-11-28 06:50 GMT   |   Update On 2023-11-28 06:50 GMT
  • உணவின் ஊட்டச்சத்துகள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகின்றன.
  • உணவின் சுவையை அதிகரிக்கச் செய்கிறது.

தொன்று தொட்டு நம் முன்னோர்கள் மண்பாண்டங்களில் தான் உணவை பாரம்பரியமாக சமைத்து வருகின்றனர். இன்றும் கூட பலரது வீடுகளில் ஒரு சில உணவு வகைகளை சமைக்க மண்பாண்டங் களை பயன்படுத்துவது உண்டு. சமீப காலங்களில் அந்த அளவிற்கு மண்பாண்டத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்து வருகின்றனர். மண்பாண்டத்தில் சமைக்கும் உணவானது ஊட்டச்சத்துகளை இழக்காமல் அப்படியே அதன் தன்மையை முழுமையாக கொண்டிருக்கும்.

மேலும் அதில் சமைக்கும் உணவானது அதீத சுவையுள்ளதாகவும் மாறுகின்றன. மண்பாண்டங்களில் தண்ணீரை ஊற்றினால் கால்பகுதி அப்படியே உணவில் கலந்து விடக்கூடும். இதற்கு மண்பாண்டத்தில் இருக்கும் நுண்ணிய துளைகள் வழியே நீர் கசிவு ஏற்படுவது தான் காரணம்.

மிக நுண்ணிய துளைகளை கொண்டுள்ள மண்பாண்டம் சமைக்கும் உணவில் சூடு மற்றும் ஈரப்பதம் இரண்டையுமே சமமாக பரவ செய்யும். இதனால் உணவின் ஊட்டச்சத்துகள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகின்றன. இதனால்தான் மற்ற பாத்திரங்களை விட மண்பாண்டத்தில் சமைக்கும் உணவுகள் அதிக ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது.

மண்பாண்டம் என்பது களிமண்ணால் செய்யப்பட கூடியது ஆகும். உணவின் சுவையை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் ஆரோக்கியம் பன்மடங்கு பெருகச்செய்கிறது. இதில் இருக்கும் இரும்பு, கால்சியம் போன்றவை சமைக்கும் உணவுப் பொருட்களிலும் கலந்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மண்பாண்டத்தில் சமைக்கும் உணவில் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துகள் ஏராளமாக பெருகுகின்றன. இது நம் உடலுக்கு மிகுந்த நன்மைகளை செய்யக் கூடியது.

மற்ற பாத்திரங்களில் நீங்கள் சமைக்கும் போது ஊற்றும் எண்ணெயை விட மண்பாண்டத்தில் நீங்கள் சமைக்கும் போது குறைவாகவே ஊற்றலாம். உணவை மண்பாண்டத்தில் மிதமான தீயில் சமைக்கும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது.

எனவே இதில் இருக்கும் ஈரப்பதம் மற்றும் இயற்கையாக கிடைக்கும் எண்ணெய் பாதுகாக்கப்படுகிறது. எனவே நாம் அதிகமாக எண்ணெய் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. இதனால் மண்பாண்டத்தில் சமைப்பதால் இதயத்திற்கும் வலுசேர்க்கிறது.

மண்பாண்டத்தில் உணவை சமைத்து வந்தால் இதய நோய்க்கான அறிகுறிகள் குறையும். புதிதாக மண்பாண்டம் வாங்குபவர்கள் சிறிதுநேரம் அதனை தண்ணீரில் ஊற வைக்கவும். நன்கு உலர்ந்த பின் உங்களிடமிருக்கும் சமையல் எண்ணெயை மண்பாண்டத்தின் உள்புறமாக தடவி நிரம்ப தண்ணீரை ஊற்றி குறைந்த தீயில் 2 மணி நேரம் கொதிக்க விடுங்கள்.

பின்னர் அப்படியே தண்ணீரை ஆற விடுங்கள். இதனால் மண்பாண்டம் திடமாக மாறும். அதன் பிறகு நீங்கள் சமைக்கும் போது எந்த விதமான கசிவும் நுண்துளைகள் மூலம் ஏற்படாமல் இருக்கும்.

 மண்பாண்டத்தில் இருக்கும் மண் வாசமும் அகலும், அதன் பிறகு சமைக்கப்படும் உணவானது ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும். ருசி மிகுந்ததாகவும் பாதுகாப் பானதாகவும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இவ்வளவு நன்மைகளை தரக்கூடிய மண்பாண்டத்தை விடுத்து மற்ற பாத்திரங்களை இன்னமும் பயன்படுத்துவது ஏன்? முடிந்தவரை உங்களுக்கு எதற்கெல்லாம் நிறைந்து மண்பாண்டம் பயன்படுத்த முடியுமோ! அந்த உணவு எல்லாம் மண்பாண்டத்தை வாங்கி பயன்படுத்துங்கள்.

குறிப்பாக கீரை மற்றும் பருப்பு உணவை சமைக்க மண்பாண்டத்தை பயன்படுத்துவது ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்யும். அதனால் சமையலுக்கு மண்பானைகளை பயன்படுத்தி நோயற்ற வாழ்க்கைக்கு வழிவகுத்து வாழ்க்கையில் பயணிப்போம்.

Tags:    

Similar News