சமையல்

வீட்டிலேயே செய்யலாம் கரம் மசாலா தூள்

Published On 2023-01-02 06:26 GMT   |   Update On 2023-01-02 06:26 GMT
  • இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 
  • இந்த மசாலாவை கடையில் வாங்குவதை விட வீட்டில் செய்வதே சிறந்தது.

தேவையான பொருள்கள் :

தனியா - கால் கப்

ஏலக்காய் - 2 தேக்கரண்டி

கருப்பு ஏலக்காய் - 3

மிளகு - 2 தேக்கரண்டி

கிராம்பு - 2 தேக்கரண்டி

சோம்பு - ஒரு தேக்கரண்டி

அன்னாசிப்பூ - 4

ஒரு இன்ச் அளவில் பட்டை - 4

ஜாதிக்காய் - பாதி (அ) ஜாதிக்காய் பொடி - ஒரு தேக்கரண்டி

பிரியாணி இலை - 2

சிகப்பு மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)

சீரகம் - 2 தேக்கரண்டி

ஜாதிபத்திரி - ஒன்று

பொடியாக நறுக்கிய காய்ந்த பூண்டு - ஒரு தேக்கரண்டி

சுக்கு - சிறிது (அ) சுக்குப்பொடி - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

தேவையானவற்றை அளந்து எடுத்துக் கொள்ளவும். கருப்பு ஏலக்காய், சுக்கு, ஜாதிக்காயை நசுக்கி வைக்கவும்.

ஒவ்வொன்றாக சிறுதீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். நன்றாக சூடு போக ஆற வைக்கவும். 

ஆறியதும் விரும்பிய பதத்தில் அரைக்கவும்.

இப்போது மணமான கரம் மசாலா பொடி தயார்.

காற்று போகாத டப்பாவில் அடைத்து வைத்து பயன்படுத்துங்கள்.

Tags:    

Similar News