சமையல்

இன்று மதுரை பன் பரோட்டா செய்யலாம் வாங்க...

Published On 2023-06-24 09:51 GMT   |   Update On 2023-06-24 09:51 GMT
  • மதுரையில் பன் பரோட்டா மிகவும் பிரபலம்.
  • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மைதா - 2 கப்

சர்க்கரை - 1 தேக்கரண்டி

முட்டை - 1

பால் - 1 மேசைக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* ஒரு கிண்ணத்தில் மைதா, தேவையான அளவு உப்பு, சர்க்கரை, ஒரு முட்டை உடைத்து ஊற்றி, அதில் பால் சேர்த்து நன்கு பிசையவும்.

* பிசைந்த மாவில் எண்ணெயை தடவி இரண்டு மணி நேரம் மூடிவைக்கவும்.

* இரண்டு மணி நேரம் கழித்து மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி அந்த உருண்டைகள் மீது எண்ணெயை தடவி மேலும் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

* அடுத்து கல்லில் எண்ணெயை தடவி மாவை சப்பாத்தி கட்டையால் மெல்லிதாக தேய்க்க வேண்டும்.

* தேய்த்த மாவை விரலால் சூற்றி (வட்ட வடிவில்) வைக்கவும்.

* ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு இருபுறமும் பொன்னிறமாகும் வரை சூடவும்.

* சுவையான மற்றும் மொறு மொறுப்பான மதுரை பன் பரோட்டா தயார்.

* இதற்கு தொட்டுக்கொள்ள சிக்கன், மட்டன் சால்னா சூப்பராக இருக்கும்.

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News