சமையல்

திடீர் சமையல்: அப்பள பஜ்ஜி

Published On 2022-12-22 14:50 IST   |   Update On 2022-12-22 14:50:00 IST
  • இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்யலாம்.
  • திடீரென விருந்தினர் வந்தால் இந்த ரெசிபி செய்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள் :

உளுந்து அப்பளம் அல்லது மிளகு அப்பளம் - 4,

கடலை மாவு - 100 கிராம்,

அரிசி மாவு - 20 கிராம்,

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

சமையல் சோடா- ஒரு சிட்டிகை,

பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு,

எண்ணெய் - 300 கிராம்.

செய்முறை:

ஒவ்வொரு அப்பளத்தையும் நான்காக கட் செய்துகொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

இதில் ஒரு டீஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் விட்டுக் கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் அப்பளத் துண்டுகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இப்போது சூப்பரான அப்பள பஜ்ஜி ரெடி.

குறிப்பு: அப்பளத்தில் உப்பு இருக்கும் என்பதால், கவனமாக சற்று குறைவான உப்பை மாவில் சேர்க்கவும்.

Tags:    

Similar News