சமையல்
கோதுமை ரவை குழிப்பணியாரம்

10 நிமிடத்தில் செய்யலாம் கோதுமை ரவை குழிப்பணியாரம்

Published On 2022-03-03 05:17 GMT   |   Update On 2022-03-03 05:17 GMT
தினமும் கோதுமை ரவையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். உடல் பலம் அதிகரிக்கும், ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்

கோதுமை ரவை – 1/2 கப்,
உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
வெங்காயம் – 1,
ப.மிளகாய் – 2,
கடுகு – 1/4 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது,
எண்ணெய் – 2 டீஸ்பூன் மற்றும் பணியாரம் செய்வதற்கு தேவையான அளவு.

செய்முறை

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமை ரவை, உளுந்து, வெந்தயத்தை 3 மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்து கொள்ளவும்.

உப்பு சேர்த்து கலக்கி 2 மணி நேரம் புளிக்க விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பிறகு வெங்காயம். ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் இந்த கலவையை மாவில் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.

பணியார கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் சேர்த்து மாவை சேர்க்கவும்.

மிதமான தீயில் வைத்து வேக விடவும். ஒருபுறம் வெந்ததும் திருப்பி விடவும். இரண்டுபுறமும் வெந்தவுடன் சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

சூப்பரான கோதுமை ரவை குழிப்பணியாரம் ரெடி.
Tags:    

Similar News