சமையல்
எள்ளுப் பொடி

இதய நோய் வராமல் தடுக்கும் எள்ளுப் பொடி

Published On 2022-02-17 05:25 GMT   |   Update On 2022-02-17 05:25 GMT
எள்ளை சாப்பிடுவதால், உடலில் சேர்ந்துள்ள கழிவுகள் எளிதாக வெளியேறி விடும். முக்கியமாக, செரிமான கோளாறு உள்ளோர், தினமும், அரை தேக்கரண்டி எள் சாப்பிடுவது சிறந்தது.
தேவையான பொருள்கள்

எள் - 100 கிராம்
மிளகாய் வத்தல் - 6
புளி - 1 (எலுமிச்சை பழம் அளவு)
பூண்டு - 10 பல்
உப்பு - 1 1/2 மேஜைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - 1 தேக்கரண்டி

செய்முறை

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எள்ளைப் போட்டு வறுக்கவும். எள் வெடித்து நின்றதும் அதை தனியாக எடுத்து வைக்கவும்.

அதே கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தலை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

பின்னர் புளி, பூண்டு ஆகியவற்றைத் தனித்தனியாக போட்டு வறுக்கவும்.

கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு அதே கடாயில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து கொள்ளவும்.

ஆறிய பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு அதனுடன் உப்பையும் சேர்த்து பொடித்து கொள்ளவும்.

எள்ளுப் பொடி ரெடி.

இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். காற்று புகாத பாட்டிலில் போட்டு ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.
Tags:    

Similar News