சமையல்
அவரைக்காய் முட்டை பொரியல்

கால்சியம் சத்து நிறைந்த அவரைக்காய் முட்டை பொரியல்

Published On 2022-01-24 05:24 GMT   |   Update On 2022-01-24 05:24 GMT
அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை சாப்பிடுவது நல்லது. ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
தேவையான பொருள்கள்

அவரைக்காய் - 100 கிராம்
முட்டை - 1
தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

அவரைக்காயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும்  பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.   

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நல்ல பொன்னிறமானதும் வெட்டி வைத்துள்ள அவரைக்காய், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.

காய் நன்கு வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்.

முட்டை வெந்ததும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

சுவையான அவரைக்காய் முட்டை பொரியல் ரெடி.

Tags:    

Similar News