லைஃப்ஸ்டைல்
மொச்சை சாலட்

புரதச்சத்து நிறைந்த மொச்சை சாலட்

Published On 2021-10-30 05:23 GMT   |   Update On 2021-10-30 05:23 GMT
மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறையும். இன்று மொச்சையில் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:

மொச்சை - அரை கப்,
வெங்காயம் - ஒன்று,
தக்காளி - ஒன்று,
குடைமிளகாய் - ஒன்று,
ஆலிவ் ஆயில் - 3 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிதளவு,
உலர்திராட்சை - 20 கிராம்,
பாதாம் - 10
உப்பு - தேவைக்கு.

செய்முறை:


வெள்ளை மொச்சையை நான்கு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும்.

பாதாமை 3 மணி நேரம் ஊற வைத்து நீள வாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி (விதை நீக்கி), குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் வேகவைத்த மொச்சை, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், தக்காளி, உலர்திராட்சை, பாதாம், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி, எலுமிச்சைச்சாறு அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும்.

சூப்பரான சத்தான மொச்சை சாலட் ரெடி.

Tags:    

Similar News