லைஃப்ஸ்டைல்
சோயா பீன்ஸ் பாசிப்பருப்பு அடை

சோயா பீன்ஸ் பாசிப்பருப்பு அடை

Published On 2020-12-03 04:27 GMT   |   Update On 2020-12-03 04:27 GMT
சோயா பீன்ஸ், பாசி பயறு ஆகியவற்றில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. பச்சை பயறு, சோயா பீன்ஸ் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் நலம்பெறும்.
தேவையான பொருள்கள்:

பச்சரிசி - 1 கப் 
இட்லி அரிசி - 1 கப் 
கடலைப்பருப்பு -1/2 கப் 
துவரம்பருப்பு - 1/2 கப் 
சோயா பயறு - 1/2 கப் 
பாசிப்பருப்பு - 3 ஸ்பூன் 
மிளகாய் வற்றல் - 7 
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன் 
தேங்காய்த் துருவல் - 1/4 கப் 
கறிவேப்பிலை - சிறிதளவு 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு.. 

செய்முறை:

முதலில் பச்சரிசி, இட்லி அரிசி, து.பருப்பு, க.பருப்பு, பாசி பருப்பு மற்றும் சோயா பயறு ஆகியவை குறிப்பிட்ட அளவில் சுமார் 3 மணி நேரம் ஊற வைக்கவும். 

பிறகு மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை ஆகியவையுடன் ஊறவைத்த அரிசி மற்றும் பருப்புடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். 

அரைத்த மாவுடன் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். 

பின்னர் அடுப்பில் தோசை கல் வைத்து சூடான பிறகு மாவை அடை போல் தட்டி கொள்ளவும். இருபுறமும் நன்றாக வேக எண்ணெய் ஊற்றி கொள்ளவும். 

சூடான சோயா பீன்ஸ் பாசிப்பருப்பு அடை தயார்... 

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News