லைஃப்ஸ்டைல்
வெண்டைக்காய் கேரட் தோசை

வெண்டைக்காய் கேரட் தோசை

Published On 2020-11-21 05:03 GMT   |   Update On 2020-11-21 05:03 GMT
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ருசியான தோசை வகைகளை காய்கறிகளை கொண்டே தயார் செய்து கொடுக்கலாம். அந்த வகையில் வெண்டைக்காய் தோசை தயாரிப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - ஒன்றரை கப்
காய்ந்த மிளகாய் - 3
பெ.வெங்காயம் - 1
கேரட் - 1
வெண்டைக்காய் - 100 கிராம்
கடுகு, சீரகம் - ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு தழை

செய்முறை:

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

வெண்டைக்காய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.

ஓரளவு அரைபட்டதும் வெண்டைக்காயை சேர்த்து நைசாக அரைத்து புளிக்க வைக்கவும்.

மாவு புளித்ததும் கடுகு சீரகத்தை தாளித்து அதனுடன் சேர்த்துக்கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவிக்கொள்ளவும்.

அது சூடானதும் மாவை ஊற்றவும். அதனுடன் வெங்காயம், கேரட், கொத்தமல்லி தழையை தூவி தோசைகளாக சுட்டெடுக்கவும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News