பெண்கள் உலகம்
எலுமிச்சை இஞ்சி ரசம்

உடல் வலியை போக்கும் எலுமிச்சை இஞ்சி ரசம்

Published On 2020-11-20 10:21 IST   |   Update On 2020-11-20 10:21:00 IST
சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் இந்த எலுமிச்சை இஞ்சி ரசம். இந்த ரசம் உடல் வலியை போக்கும். மேலும் சளி, தொண்டை வலியை குணமாக்கும்.
தேவையான பொருட்கள்

பிஞ்சு இஞ்சி - 25 கிராம்
பருப்பு வேகவைத்த தண்ணீர் - 2 டம்ளர்
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
எலுமிச்சைச் சாறு - அரைப் பழச் சாறு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க

நெய் - 2 டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன்
பொடித்த மிளகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
தக்காளி - 1

செய்முறை

தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு நெய் விட்டுச் சூடானதும் அதில் கடுகு, சீரகம், பொடித்த மிளகு, பெருங்காயம் ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள்.

பிறகு தக்காளி, இஞ்சித் துருவல், உப்பு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டி பருப்புத் தண்ணீரைச் சேருங்கள்.

நுரைகட்டி வரும்போது கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சர்க்கரை, எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து இறக்குங்கள். கொதிக்கவிடக் கூடாது.

சத்தான எலுமிச்சை இஞ்சி ரசம் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்

Similar News