லைஃப்ஸ்டைல்
வெள்ளை பூசணிக்காய் சூப்

உடல் எடையை குறைக்க விருப்பமா? அப்ப வெள்ளை பூசணிக்காய் சூப் குடிங்க...

Published On 2020-11-05 05:36 GMT   |   Update On 2020-11-05 05:36 GMT
பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது.
தேவையான பொருட்கள்

வெள்ளை பூசணிக்காய் - 200 கிராம்
தக்காளி - ஒன்று
கேரட் - இரண்டு டீஸ்பூன்
மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
சீரக தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைகேற்ப

செய்முறை

வெள்ளை பூசணிக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய வெள்ளைப் பூசணிக்காய், தக்காளி, கேரட்டை விழுதாக அரைத்து கொள்ளவும். தேவைபட்டால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.

பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின், ஒரு கிண்ணத்தில் ஊற்றி மிளகு தூள், சீரக தூள் தூவி பரிமாறவும்.

உடலுக்கு குளுர்ச்சியான சூப் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News