லைஃப்ஸ்டைல்
வெள்ளி நகைகள்

பெண்களின் விருப்பத்திற்கேற்ப வித விதமாக வந்திருக்கும் வெள்ளி நகைகள்

Published On 2020-10-16 04:09 GMT   |   Update On 2020-10-16 04:09 GMT
நகைகள் என்றால் அவை தங்கத்தினால் செய்ததாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? வெள்ளி நகைகளிலும் எத்தனையோ டிசைன்கள், வடிவங்கள் என்று அற்புதமான நகைகள் வந்து விட்டன.
நகைகள் என்றால் அவை தங்கத்தினால் செய்ததாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? வெள்ளி நகைகளிலும் எத்தனையோ டிசைன்கள், வடிவங் கள் என்று அற்புதமான நகைகள் வந்து விட்டன.

சாதாரணமாக வெள்ளி நகைகள் என்றாலே மெட்டி, கொலுசு அதிகபட்மாக கை மோதிரங்கள் இவற்றைத்தான் வாங்குவோம். ஆனால் வெள்ளியிலும் பழமையான நகைகள், எத்னிக் நகைகள் மணப்பெண் அலங்கார நகைகள், பாரம்பரிய நகைகள் என அனைத்தும் வந்துவிட்டன.

* வெள்ளி ஹாரத்தில் கையகல டாலர்கள். டாலர்களின் ஓரத்தில் சலங்கைகள். ஒரு டாலரின் கீழே இணைக்கப்பட்ட மற்றொரு பெரிய டாலர். இந்த ஒரு நகை மட்டும் போதும். இத்துடன் வேறு எந்த நகையும் அணியத்தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு ஆளுமையான தோற்றத்தைத் தருகிறது. அடர்த்தியான நிறமுள்ள பிளெயின் சேலைகளுடன் இந்த ஹாரமானது அணிந்து சென்றால் மிகவும் அருமையாக இருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. பெரிய நிகழ்ச்சிகளுக்கு இதை அணிந்து செல்லலாம்.

* இரண்டு சரமாக மெல்லிய வெள்ளிச் செயின், அதன் இடையிடையே வெள்ளிக் குண்டுகள் கீழே அழகிய பெரிய அகலமான டாலர். அதன் கீழ்ப்புறத்தில் சலங்கைகளும், வெள்ளிச்செயினும் தொங்குவது போல் வடிவமைத்திருப்பது அற்புதம் என்று சொல்லலாம். கோவில்கள் மற்றும் சிறிய விழாக்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவையாக இவை இருக்கும்.

* சிறிய லக்‌ஷ்மியானது ஒன்றன் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்ட ஹாரத்திற்கு இரண்டு மயில்கள் ஒட்டிக்கொண்டிருக்க அதன் கீழே லக்‌ஷ்மி அருள் பாலிக்கிறார். இந்த டாலரின் கீழ் சிவப்பு கற்கள் பதித்திருக்க, அந்த ஒவ்வொரு கற்களின் கீழும் முத்துக்கள் தொங்குகின்றன. வரவேற்பு நிகழ்ச்சிகள், கோவில் விழாக்கள் மற்றும் குடும்ப விழாக்களில் இவற்றை அணிந்தால் நம்முடைய பெயர் ஏதுவாக இருந்தாலும் லக்‌ஷ்மிகரமான பெண் என்று பெயர் எடுக்கலாம்.

* காசுமாலையை வெள்ளியில் அணிந் தால் கட்டாயம் நன்றாகத்தான் இருக்கும். இவை ஒரே சரமாகவும், பல அடுக்குச் சரங்களாகவும் உள்ளன. இந்தக் காசுமாலைகளை சேலை, பாவாடை தாவணியோடு மட்டுமல்லாமல் சல்வார் சூட், லாங் ஃப்ராக், மட்டுமல்லாமல் குர்த்தி என எதனுடனும் பொருத்தி அணிந்து கொள்ளலாம்.

* வெள்ளி குந்தன் ஹாரங்களின் அழகை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். சிறிய குந்தன் கற்கள் பதித்த ஹாரங்கள் ஒரு விதமான அழகு என்றால் பெரிய குந்தன் வேலைப்பாட்டுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஹாரங்கள் அழகோ அழகு. பதக்கங்கள் இல்லாமல் வரும் ஆரங்களும் பார்க்க ஒரு கவுரவமான மிடுக்கான தோற்றத்தைத் தருவதாக உள்ளன. காக்ரா சோளி, பட்டு சல்வார் செட், பட்டு குர்திகள் மற்றும் லெகங்காக்களுடன் இவற்றை அணிந்தால் விழா நாயகியாக நீங்கள் இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

* வெள்ளியில் வரும் சோக்கர் செட்டுகளில் இத்தனை வகைகளா என்று வாய்பிளக்கும் அளவுக்கு ஏராளமான மாடல்கள் உள்ளன. இரண்டு விரல் அகல சோக்கர், குந்தன் வேலைப்பாடுடைய சோக்கர்களில் சலங்கைகள் தொங்குவது போல் உள்ள சோக்கர்கள், கையகல சோக்கர், கழுத்திலிருந்து துவங்கி மார்பை மறைப்பது போல் உள்ள மாலைகள் என்று வகை வகையான நகைகள்.

* சில தங்க கழுத்தணிகள் அதிக பவுனில் செய்யப்பட்டவையாக இருக்கும். அதுபோன்ற நகைகள் அணிய ஆசையாக இருக்கின்றது ஆனால் அவ்வளவு பணத்தை அதில் முதலீடு செய்ய வேண்டுமா? என்று நினைப்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பவை வெள்ளியில்அதே போன்று செய்யப்பட்டு தங்க முலாம் போடப்பட்ட நகைகளாகும். இந்திப் படமான ‘ ஜோதா அக்பர்’ படத்தில் ஐஸ்வர்யாராய் அவர்கள் அணிந்தது போன்ற பெரிய பெரிய நகைகள் கூட வெள்ளியில் செய்யப்பட்டு தங்க முலாம் பூசி விற்பனை செய்யப்படுகின்றன. தங்க நகைகளுக்கு செய்யப்படும் அனைத்து வேலைப்பாடுகளும் வெள்ளி நகைகளிலும் கிடைக்கின்றன என்பது கூடுதல் தகவலாகும்.

* உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெள்ளியால் செய்யப்பட்ட நகைகளை அணிகிறார்கள்.

* வெள்ளியால் செய்யப்பட்ட காதணிகள் சிறிய அளவிலிருந்து பெரிய அளவு வரை கிடைக்கின்றன. பெரிய அளவிலிருக்கும் ‘ஜிமிக்கிகள்’ பெண்கலால் பெரிதும் விரும்பி அணியப்படுகின்றன.

* வெள்ளியில் “ஹூப்ஸ்” என்று சொல்லப்படும் வளையங்கள், தொங்கட்டான்கள், “டேங்கிள்ஸ்” என்று அழைக்கப்படும் நீளமாகத் தொங்கும் காதணிகள் “சான்டிலியர்” மாடல்கள், ஹக்கிஸ் மாடல், டியர் ட்ராப் மாடல், ‘இயர் கஃப்ஸ் எனப்படும் காது மடல்களுக்கும் செய்யப்பட்டிருக்கும் காதணிகள், கம்மல் அணிகின்ற துவாரம் வழியாக நுழைக்கப்படும் செயினானது துவாரத்தின் இருபக்கமும் தொங்குவது போல சில சமயங்களில் காதின் முன்புறத்தில் தொங்கும் செயினில் கற்கள் அல்லது மணிகள் இணைக்கப்பட்ட ‘த்ரெட்டர்’, “சந்த்பாலி” எனப்படும் சந்திர வடிவில் வட்டமாக இருக்கும் காதணிகள் எனப்பல மாடல்களில் வெள்ளியால் செய்யப்பட்ட காதணிகள் விற்பனை செய்யப் படுவதோடு அதைப் பெண்கள் விரும்பி அணிகிறார்கள் என்பது கூடுதல் தகவலாகும்.
Tags:    

Similar News