லைஃப்ஸ்டைல்
ரோஸ்ட் செய்த குடைமிளகாய் சூப்

வைட்டமின் சி நிறைந்த, உடல் எடையை குறைக்கும் சூப்

Published On 2020-10-01 04:21 GMT   |   Update On 2020-10-01 04:21 GMT
குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகமுள்ளது. குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
தேவையான பொருட்கள்:

சிவப்பு குடை மிளகாய் - 2
லக்சா பேஸ்ட் (laksa paste) - 150 கிராம்
மிளகு - தேவையான அளவு
மிளகு தூள்- தேவையான அளவு
உப்பு -  சுவைக்கேற்ப
வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 25 கிராம்
சமையல் கிரீம் (Cooking Cream) - 200 மிலி
தேங்காய் பால் பவுடர் - 200 கிராம்
வெண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குடை மிளகாய்களை உப்பு, மிளகு மற்றும் கிரீம் ஆகியவற்றால் சீசன் செய்து, 10 நிமிடங்கள் பேக் செய்யவும்.

அதன் தோல் மற்றும் விதைகளை அகற்றி விட்டு, நன்கு அரைத்துக் கொள்ளவும்.

சூப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருக்கியதும், வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் அரைத்த குடைமிளகாயைச் சேர்த்து, அதனுடன் லக்சா பேஸ்ட், தேங்காய் பால் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து, கொதிக்க வைத்து, மிதமானச் சூட்டில் வைக்கவும்.

உப்பு, மிளகு தூள் சேர்த்து சூடாக பரிமாறவும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News