பெண்கள் உலகம்

ஆரோக்கியம் காக்கும் செலரி ஜூஸ்

Published On 2019-04-04 10:14 IST   |   Update On 2019-04-04 10:14:00 IST
இப்பொழுது செலரி ஜூஸ் பிரபலமாகி வருகிறது. தினமும் உங்கள் டயட்டில் செலரியை சேர்ப்பதால் நல்ல பலனைத் தரும். இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

செலரி தண்டுகள் - 2
பசலைக் கீரைகள் - 5
சாத்துக்குடி - 1
லெமன் ஜூஸ் - சுவைக்கு



செய்முறை :

செலரி, பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

சாத்துக்குடியைப் பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.

மிக்சியில் சாத்துக்குடி சாறை ஊற்றி அதனுடன் நறுக்கிய பசலை கீரை மற்றும் செலரியை போட்டு மிக்ஸியில் அரைக்கவும்.

பிறகு அதில் லெமன் ஜூஸ் கலந்து குடிக்கவும்.

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு புத்துணர்வையும் தரும்.

சூப்பரான செலரி ஜூஸ் ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்

Similar News