லைஃப்ஸ்டைல்

சத்தான டிபன் மேத்தி தேப்லா

Published On 2019-04-02 03:40 GMT   |   Update On 2019-04-02 03:40 GMT
வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயக்கீரை சேர்த்து செய்யும் தேப்லா மிகவும் சத்தானது. இன்று இந்த மேத்தி தேப்லாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப்,
கடலை மாவு - 1/4 கப்,
வெந்தயக்கீரை (மேத்தி) - 1/2 கட்டு,
ஓமம் - 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
எள் - 1/2 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
தயிர் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :

வெந்தயக் கீரையை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் கோதுமை மாவு, கடலை மாவு, வெந்தயக்கீரை, ஓமம், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தயிர், எள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசறி கொள்ளவும்.

இதில் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து மிருதுவான சப்பாத்தி மாவாக பிசைந்து 30 நிமிடம் ஊறவிடவும்.

மாவை சம அளவு உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் சிறிது எண்ணெய் விட்டு தேப்லாவினை போட்டு சிறிது சூடானதும் திருப்பவும். இருபுறமும் எண்ணெய் தடவி நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து மேத்தி தேப்லாவை சூடாக பரிமாறவும்.

குறிப்பு: மேத்தி தேப்லாவை 15 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையான போது சூடு செய்து பயன்படுத்தலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News