லைஃப்ஸ்டைல்

சத்தான டிபன் சோள ரவை புட்டு

Published On 2019-03-02 04:45 GMT   |   Update On 2019-03-02 04:45 GMT
சோளத்தில் (கார்ன்) அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சோள ரவையில் சத்தான சுவையான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

சோளக்குருணை - 1 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
தேங்காய்த்துருவல் - 3/4 கப்,
நாட்டுச்சர்க்கரை - தேவையான அளவு
உப்பு - 1 சிட்டிகை,
ஏலக்காய்தூள் - 1/4 டீஸ்பூன்,
நெய் - சிறிது.



செய்முறை :

மக்காச்சோளத்தை காயவைத்துச் சற்று கொரகொப்பாக நொய் போல் உடைத்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து அரிசி மாவையும், சோளக்குருணையையும் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.

வறுத்த அரிசி மாவையும், சோளக்குருணையையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில், ஏலக்காய்தூள் சேர்த்து நன்றாக கலந்த பின்னர் உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாக சேர்த்து புட்டு மாவு பதத்தில் கலந்து நன்கு அழுத்தி துணியால் 10 நிமிடம் மூடி வைக்கவும்.

புட்டு குழலில் முதலில் சிறிது தேங்காய் துருவல் போட்டு பின்னர் கலந்து வைத்த மாவை போட வேண்டும். இந்த முறையில் அனைத்து மாவையும் போட்டு அடுப்பில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும்,

சூப்பரான சத்தான சோள ரவை புட்டு ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News