லைஃப்ஸ்டைல்

வைட்டமின் சி நிறைந்த பீட்ரூட் - கேரட் சாலட்

Published On 2018-09-18 04:32 GMT   |   Update On 2018-09-18 04:32 GMT
பீட்ரூட் - கேரட் சாலட்டில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த சாலட்டில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்  :

துருவிய பீட்ரூட் - 1/2 கப்
துருவிய கேரட் - ½ கப்
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
ஊறவைத்த நிலக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - பாதி பழம்
மிளகுத் தூள் - ¼ டீஸ்பூன்
இந்துப்பு - சிறிதளவு

தாளிக்க :

கடுகு, உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு
எண்ணெய் - அரை டீஸ்பூன்



செய்முறை :

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், கேரட், தேங்காய் போட்டு கிளறவும்.

பின்னர் அதில் நிலக்கடலை போட்டு கிளறவும்.

மேலும், இதில் மிளகு தூள், இந்துப்பு போட்டு கலக்க வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து சாலட்டில் போட்டுக் கிளற வேண்டும்.

கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து பரிமாறவும்.

சத்து நிறைந்த பீட்ரூட் - கேரட் சாலட் ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News