பெண்கள் உலகம்

சத்து நிறைந்த பார்லி வெந்தயக்கீரை சப்பாத்தி

Published On 2018-09-08 10:11 IST   |   Update On 2018-09-08 10:11:00 IST
பார்லி, வெந்தயக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று இந்த இரண்டையும் வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

பார்லி மாவு - 3 கப்
வெந்தயக்கீரை - 1 கப்
வெங்காயம் - 1
ப.மிளகாய் - 3
உப்பு, எண்ணெய் - சிறிதளவு



செய்முறை :

கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடனாதும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

அடுத்து அதில் கீரையை சேர்த்து 5 நிமிடம் வதக்கி ஆற விடவும்.

கீரை ஆறியவுடன் அதனுடன் பார்லி மாவு, உப்பு சேர்த்து கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடம் அப்படியே வைக்கவும்.

மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தி போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

சுவையான சத்தான பார்லி வெந்தயக்கீரை சப்பாத்தி ரெடி.

இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி அருமையாக இருக்கும்.

இதற்கு எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News