லைஃப்ஸ்டைல்

உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி

Published On 2018-08-02 03:48 GMT   |   Update On 2018-08-02 03:48 GMT
டயட்டில் இருப்பவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் நல்லது. இன்று ஓட்ஸ், வெஜிடபிள் சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப்
ஓட்ஸ் - 3/4 கப்
கேரட் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
மல்லி தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 1/4 கப்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்



செய்முறை :


ஓட்சை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து பொடித்து கொள்ளவும்.

கேரட்டை துருவிக் கொள்ளவும்.

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், கோதுமை மாவு, துருவிய கேரட், கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய் பேஸ்ட், மல்லித்தூள, சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு, தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுத்து மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

ஓட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி ரெடி.

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News