லைஃப்ஸ்டைல்

சத்தான பச்சைப்பயறு துவையல்

Published On 2017-01-31 07:17 GMT   |   Update On 2017-01-31 07:18 GMT
பச்சை பயிறை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். இன்று பச்சைப்பயறு துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சைப்பயறு - அரை கப்,
பூண்டு - ஒரு பல்,
இஞ்சி - சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 5,
புளி - கோலி அளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை :

* இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

* வெறும் வாணலியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

* பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

* அனைத்து நன்றாக ஆறியபின் பயறு, உப்பு, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

* சத்தான பச்சைப்பயறு துவையல் ரெடி.

* சூடான சாதத்தில் இந்த துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ளம் செய்து... அதில் பூண்டு ரசத்தை விட்டு சாப்பிட்டால்... ஆஹா, தேவாமிர்தம்!

- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News