லைஃப்ஸ்டைல்

ஓட்ஸ் - கோதுமை ரவை பணியாரம்

Published On 2016-08-27 06:09 GMT   |   Update On 2016-08-27 06:09 GMT
ஓட்ஸ், கோதுமை ரவை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது ஓட்ஸ் - கோதுமை ரவை பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1 டம்ளர்
பச்சரிசி மாவு - 1 டம்ளர்
கோதுமை ரவை - 1/4 கப்
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1/2 இணுக்கு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
வெங்காயம் - 2

செய்முறை :

* ப.மிளகாய், பூண்டு, இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஓட்ஸையும், கோதுமை ரவையையும் தனித்தனியே வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* அரைத்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் அரிசி மாவையும் சேர்க்கவும்.

* இவற்றுடன் தயிர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ப.மிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கி மாவில் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* குழிப்பணியாரச்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் ஓட்ஸ் மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும்.

6. வெந்த பிறகு திருப்பிப் போடவும்

* சுவையான ஓட்ஸ் பணியாரம் தயார்.

* மிளகாய்ப்பொடி, புதினா சட்னியுடன் பரிமாறவும்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News