பெண்கள் உலகம்

சத்தான சுவையான கேரட் மில்க் ஷேக்

Published On 2016-08-24 11:02 IST   |   Update On 2016-08-24 11:02:00 IST
சத்தான சுவையான கேரட் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :

கேரட் - 2
பால் - ஒரு டம்ளர்
தேன் - ஒன்றரை மேசைக்கரண்டி
வெனிலா ஐஸ்கிரீம் - 2 மேசைக்கரண்டி
பாதாம் - 4
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
ஐஸ் கட்டிகள் - 2

செய்முறை :

* கேரட்டைத் துருவிக்கொள்ளவும்.

* பாதாமை தோல் நீக்கி சில மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.

* சிறிது கேரட் துருவலையும், பாதாமையும் அலங்கரிப்பதற்காக தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* மிக்ஸியில் துருவிய கேரட் துருவலுடன், தோல் நீக்கிய பாதாம், சிறிது பால் சேர்த்து அரைக்கவும்.

* அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் மீதமுள்ள பால், ஐஸ்க்ரீம், ஐஸ்கட்டிகள், தேன் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* பரிமாற போகும் கப்பில் மில்க் ஷேக்கினை ஊற்றி, அதன் மேல் தனியாக எடுத்து வைத்துள்ள கேரட் துருவல் மற்றும் பாதாமை தூவி அதனுடன் குங்கும்ப்பூவும் தூவி அலங்கரித்து பரிமாறவும்.

* சுவையான சத்தான கேரட் மில்க் ஷேக் ரெடி.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News