லைஃப்ஸ்டைல்

சுவையான முட்டைக்கோஸ் ஸ்டஃப்டு புடலங்காய்

Published On 2016-08-04 05:02 GMT   |   Update On 2016-08-04 05:02 GMT
புடலங்காயை பிடிக்காதவர்களுக்கு இவ்வாறு ஸ்டஃப்டு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பிஞ்சு புடலங்காய் - அரை கிலோ
முட்டை கோஸ் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 200 கிராம்
கரம்மசாலா தூள்  - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு  - 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை :

* பிஞ்சு புடலங்காயை 2 இஞ்ச் அளவில் வட்ட வடிவத்தில் வெட்டு உள்ளே இருக்கும் விதைகளை எடுத்து விடவும்.

* முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கடலை மாவை வெறும் கடாயில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கிய பின்னர் முட்டைக்கோஸ், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக வதக்கி பின் வறுத்த கடலை மாவைக் கலந்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து பின் இறக்கவும்.

* இந்த கலவையை புடலங்காயில் ஸ்டஃப் செய்ய வேண்டும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஸ்டஃப் செய்த புடலங்காயை வைத்து சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு புறமும் வேகவைத்து எடுத்தால் ஸ்டஃப்டு புடலங்காய் ரெடி.

* இவ்வாறு குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் புடலங்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Similar News